Monday, June 17, 2013

சீர்திருத்தம் பகுதி 1: நம் நாட்டில் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலில் முதலிடம் இருப்பது எது தெரியுமா?

சீர்திருத்தம் பகுதி 1: நம் நாட்டில் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலில் முதலிடம் இருப்பது எது தெரியுமா?

நம் நாடு சுதந்திரம் அடைந்து 66 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் நாம் முன்னேற வேண்டிய துறைகள் மற்றும் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலோ மிக நீளம். நம் நாட்டில் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலில் முதலிடம் இருப்பது எது தெரியுமா ? ....

கல்வியா ? ... இல்லை ,
மருத்துவமா ? .....இல்லை ,
விவசாயமா? ..இல்லை ,
வேலைவாய்ப்புகளா ? ..இல்லை ,
தொழில்நுட்பத்திலா ? ...இல்லை ....வேறென்னவென்று கேட்கறீங்கள ?.

மேற்கூறிய அனைத்தையும் சீர்திருத்தகூடிய மகா தத்துவமான அரசியல்தான் நம் நாட்டில் சீர்திருத்தபட வேண்டிய முதல் விடயம். அரசியல் சீர்திருத்தங்களால் மட்டுமே ஒரு நாடு வளமான, பலமான முன்னேறிய நாடக இருக்க முடியும் ..





சரி, ஊழல்கரை படிந்த, அராஜகம் நிரம்பிய, ஒழுக்கம் இல்லாத நம் நாட்டு அரசியலில் எப்படி மாற்றங்கள் கொண்டு வரலாம் ? 

அதற்கு மக்களாட்சி முறையில் மிக எளிதான பதில், "மக்களுக்கு அரசியல் பற்றிய நல்லறிவும், அரசியலில் உள்ள கோட்பாடுகள் குறித்து ஒரு தெளிவும் ஏற்படுத்த வேண்டும்" .. பின்பு மக்களே முடிவு செய்து கொள்வார்கள் அவர்களது தலைவர்களை .....

தமிழகத்தில் அரசியல் எப்படி கற்றுக் கொடுக்கப்படுகிறது ?

இப்பொழுது, நம் நாட்டு மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டுவது எந்த முறைகளில் தெரியுமா ?
அதை எப்படி செய்கிறார்கள் தெரியுமா ? அவைகள் யாவும் மலிவான வியாபார யுக்திகள்.

- "சன் செய்திகள் ", "ஜெயா செய்திகள் “, கலைஞர் செய்திகள், "புதியதலைமுறை செய்திகள் " மற்றும் பல நடுநிலையற்ற செய்திகள்.

இப்போ புரிகிறதா டிவியை ஏன் இலவசமா கொடுத்தாங்கன்னு?.

இது மட்டுமா ?

-"தினமலர்", "தினகரன்”,"முரசொலி ", "விகடன் “ போன்ற
காசு கொடுத்தால் சங்கு ஊதும் ஊடக தீவிரவாதிகளின் கூட்டணி ….

பிறகு விட்டாங்களா ?

- பிரியாணிக்கும், குவாட்டருக்கும் கூடிய கூட்டத்தில் , "என் உடன்பிறப்பே,என் உடலின் ஒரு உறுப்பே" என்று அடுக்குமொழி வசனம் தொண்டை கிழிய பேசி அரசியல் அறிவு ஊட்டுவது...

- காசுக்கொடுத்தால் குத்தாட்டம் ஆடும் திரை கூத்தாடிகளை முன்னிலை படுத்தி அரசியல் பேசுவது ...

இதுதான் "திராவிட அரசியலறிவு" ஊட்டும் முறை..
அதாவது ‘ஆக்டோபஸ்’ மாதிரி நம் மக்களை தன் திராவிட மாயைக்குள் பிடித்து வைத்துள்ளார்கள்.

இலவச போதையில் உள்ள நம் மக்களுக்கு, 'மந்தை ஆட்டு' கணக்கில் இப்படி அரசியல் சொல்லித்தந்தால், அவர்கள் நேர்மையான, உண்மையான தலைவர்களை எப்படி தேர்தெடுக்க முடியும் ?

அதற்கு என்னதான் மாற்று ?

நண்பர்களே, அதை அடுத்த பகுதியில் பார்ப்போம் !!

சீர்திருத்தம் பகுதி 2 - இங்கே காண்க

#Samathuvam India

No comments:

Post a Comment