டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டுக்கு 22 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம். இந்த மகத்தான செய்தியை தொடர்ந்து அரசு பல புதிய திட்டங்களை அறிவித்தால் எப்படி இருக்கும் ?
திராவிட அரசின் மலிவு விலை சாராயக்கடையை தொடர்ந்து இலவச மிக்சி, கிரைண்டர் , டீவி , இலவச ஆடு மாடுகள், மலிவு விலை உணவகம்.... அப்புறம் ??
ஆடு மாட்டுக்கு கொடுக்கிற மலிவு விலை "புல்லுககட்டு", மலிவு விலை "புண்ணாக்கு" .
சாரயத்துக்கு சைடிஷ் மலிவு விலை "உறுகா பொட்டலம் ".
கடையில குடிக்கரவங்களுக்கு பேச்சுதுணைகொடுக்க மலிவுவிலை "அழகிகள் "
குடிச்சிட்டு சண்டைபோட மலிவு விலை "ஆயுதம் " ( அதாங்க...கட்டை, வீச்சரிவாள் ,சைக்கிள் செயின் ).
சண்டையில கிழிஞ்ச சட்டையை மாற்றிக்கொள்ள மலிவுவிலை "லுங்கி மற்றும் சட்டை" கடை.
குடிச்சவங்கள கைத்தாங்கலா வீட்டுக்கு கொண்டுபோய் சேர்க்க மலிவு விலை "பணிப்பெண்".........
அதுமட்டுமில்லாமல் வாரம்தோறும் தமிழ்நாட்டின் சோம்பேறி நம்பர் 1, மற்றும் குடிகாரார் நம்பர் 1 என்கிற பொட்டியில் வெல்பவருக்கு முதல்வருடன் தேநீர் விருந்து ....
அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு ... இதுவே வரப்பிரசதம்..
வாழ்க தமிழகம்! வளர்க யாசகம்!!
#Samathuvam India

No comments:
Post a Comment