Tuesday, June 18, 2013

சீர்திருத்தம் பகுதி 2: செவ்விந்தியர்களின் கற்றல், கற்பித்தல் முறை - இங்கே அரசியல் கற்பிற்கும் முறை எப்படி உள்ளது?


சீர்திருத்தம் பகுதி 2: செவ்விந்தியர்களின் கற்றல், கற்பித்தல் முறை - இங்கே அரசியல் கற்பிற்கும் முறை எப்படி உள்ளது?

சீர்திருத்தம் பகுதி 1 - இங்கே காண்க

இப்போதைய வல்லரசான அமெரிக்காவின் பூர்வக்குடிகள் செவ்விந்தியர்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவினர் அமெரிக்காவின் பெரும்பாண்மையான செவ்விந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.அப்போது செவ்விந்தியர்கள் கல்வி கற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது.அவர்கள் படிக்க எழுதுவது கூட அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு எதாவது ஒரு செய்தி தெரியும்னா அது அங்கிருந்த முதலாளிகளோ , ஐரோப்பவினர்களோ சொன்னால்தான் உண்டு .... அதாவது ஆடு மாடுகளை போல அவர்களை கட்டுபடுத்தி அடிமை படுத்தி வைத்திருந்தார்கள்.




அந்த நேரத்தில் அந்த செவ்விந்தியர்களுக்குள் ஒரு டீலிங் .. அந்த டீலிங் என்னன்னா , நம்மில் யாருக்காவது கற்கும் வாய்ப்பு இருந்து கற்றிருந்தால் அவர் கல்லாத ஒருவருக்கு அந்த கல்வியை கற்பிக்க வேண்டும். அவர்கள் அதை ஒரு பிரச்சாரமாக செய்திருக்கிறார்கள். அந்த வரலாறு புகழ்மிக்க பிரசாரத்தின் பெயர் " Each One ,Teach One ". அதாவது படிக்க வாய்ப்புகிடைத்த ஒவ்வொரு செவ்விந்திய அடிமையும், வேறு ஒரு படிக்காத அடிமைக்கு கண்டிப்பாக அந்த கல்வியறிவை சொல்லிதர வேண்டும் .. அவர் மற்றோருவருக்கென்று பட்டியல் நீளவேண்டும் ... சூப்பர் இல்ல ?

// பல நூற்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த இந்த காட்சிகள் , இருபத்தியோராம் நூற்றாண்டில் அப்படியே இங்க தமிழ்நாட்டுல நடக்கிறது.

அங்கே அமெரிக்காவில் ஐரோப்பவினர்தான் முதலாளி.. இங்கே திராவிட அரசியல்வாதிகள் தான் முதலாளி 

அங்கே செவ்விந்தியர்கள் அடிமைகள்.. இங்கே மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் அடிமைகள் 

அங்கே அந்த ஐரோப்பா முதலாளிகள் சொன்னதுதான் சட்டமும், செய்தியும் .. இங்கே திராவிட அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இருக்கும் ஊடகங்கள் சொன்னதுதான் சட்டமும், செய்தியும்..

அங்கே செவ்விந்தியர்களுக்கு சாப்பிடுவதற்கு கண்டிப்பாக ஏதாவது புல்லுக்கட்டு கொடுத்து இருப்பார்கள்.. இங்கே தமிழர்களுக்கு மலிவு விலை உணவகம், டாஸ்மாக் ......

ஆனால்.... 
அங்கே செவ்விந்தியர்கள் கற்றுக்கொள்ள " Each One ,Teach One " பிரச்சாரம். இங்கே தமிழர்கள் நல்ல அரசியலை கற்க எந்த முறை ? ... 
அதை விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம் ..

#Samathuvam India

Each One, Teach One -WIKI:
http://en.wikipedia.org/wiki/Each_One_Teach_One

No comments:

Post a Comment