மாநிலங்களவை தேர்தல் 2013: திராவிட சாதி அரசியலும், அதன் முற்போக்கு முகமூடியும்
மாநிலங்களவை தேர்தல் 2013 - இப்படியொரு தேர்தல் விறுவிறுப்பை தமிழக தேர்தல் களம் இதுவரை கண்டதில்லை. அரசியல்வாதிகளையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். அப்படி என்னதான் பரபரப்பு என்கிறீர்களா?
தற்போது ஆட்சி செய்யும் அண்ணாவின் பெயரை கொண்ட ஒரு திராவிட கட்சி "40-ம் நமதே" என அறிவித்து இனி வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என முழங்கி 5 மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்தது. அறிவித்து அடுத்த சில நாட்களிலேயே, வழக்கம் போல தனது ஒரு வேட்பாளரை வெளியேற்றி, “மதசார்பற்ற” பொதுவுடைமை கட்சியை சேர்ந்த ஒருவரை தன் கூடாரத்திற்குள் சேர்த்துகொண்டது.
மற்றொரு கூடாரத்தில் இருக்கும் ஆண்ட திராவிட கட்சி இந்த மாநிலங்களவை தேர்தலில் தான் வெற்றி பெற முடியாது என தெரிந்திருந்தும் தன் வேட்பாளரை போட்டிக்கு நிறுத்தியது. சரி. இனி யார் அந்த வேட்பாளர் என பார்ப்போம்.
கட்சி தொடங்கிய கலாத்தில் இருந்து தன் கட்சிக்காக தன்னையே அர்பணித்து அல்லும் பகலும் அயராது உழைத்து மக்களுக்காக பல போராட்டங்கள் செய்து சிறை சென்ற ஒரு மாபெரும் போராளி அவர். கடந்த 6 ஆண்டு காலமாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்து ஊழலற்ற சகாப்தம் படைத்தற்கு , இந்திய நாடு மட்டும் இன்றி உலகமே “2ஜி அலைகற்றல் தொலைதொடர்பில்” வியப்படைய செய்தவர். தற்போது, மீண்டும் அடுத்த ஆறு ஆண்டு காலம் அகிலமே போற்றும் வண்ணம் செயலாற்ற போட்டிக்கு நிறுத்தப்பட்டுள்ளார். ஆஹா, இதுவல்லவா பெரியார் மற்றும் அண்ணா போன்ற மாமனிதர்களின் கொள்கைகளை மதிக்கும் ஒரு திராவிட கட்சியின் செயல்பாடு.
இப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ஒரு மாமேதையை டெல்லிக்கு அனுப்ப ஆதரவு திரட்டும் பணி ஆரம்பமானது. தமிழ் ஈழத்திற்கு உலகமே போற்றும் வண்ணம் ஓயாது உழைத்த இந்த திராவிட கட்சி, அதற்கு ஒரு மைல் கல்லாக இரண்டு மாதத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துகொண்டது. இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அறிவித்து தனக்கே உரிய நடிப்பில் அரசியல் நாடகத்தை தொடங்கியது
தற்போது, தன் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள “அகில உலக அரசியல் தலைவி” வெற்றி பெற ஆதரவு கேட்டு காங்கிரஸ் கட்சியின் டெல்லி கதவை தட்டியதன் மூலம் இரண்டு மாத கால “அரசியல் நாடகம்” முடிவுக்கு வந்துள்ளது. இதன்மூலம் தமிழ் ஈழத்திற்கு தன்னுடைய “தொடர்ந்து செய்து வரும் தியாகங்களை” மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த திராவிட கட்சி. இதனை இலங்கையில் மிச்சம் மீதி வாழும் தமிழர்களும், தன் நாட்டை விட்டு புலம் பெயர்ந்த தமிழர்களும், தன்மானமுள்ள தமிழ் நாட்டு மக்களும் வரலாறு உள்ளவரை மறக்க மாட்டார்கள்.
இந்நிலையில் தன் வேட்பாளருக்காக வலைவீசும் படலம் தொடர்ந்தது. இதில் திராவிடத்தின் சூழ்ச்சி தெரியாத நான்கு ஆடுகள், நரியிடமிருந்து தப்பித்து ஓநாயிடம் மாட்டிகொண்டது. இதை தொடர்ந்து தன்வலையை பாட்டாளிகளின் மீது வீசியது. ஏற்கனவே, திராவிட சூழ்ச்சிக்கு இரையாகி, அனைத்தையும் இழந்து அதன் மூலம் சரியான பாடத்தை கற்றுக்கொண்டு, "நீர் உள்ளளவும், நிலம் உள்ளளவும், வான் உள்ளளவும் எந்த திராவிடக் கட்சியுடனும் கூட்டணி இல்லை" என்று இரண்டு வருடமாக தெருவுக்கு தெரு முழங்கி கொண்டிருக்கும் பாட்டாளிகளின் மூன்று சொத்துக்கு குறிவைத்தார்கள். அதற்காக, பாட்டாளிகளின் இளைய தலைவரை சந்தித்து ஆதரவு கேட்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்யப்பட்டது. பாட்டாளிகள் தங்கள் முடிவை உறுதியாக தெரிவித்துவிட்ட பின்னரும், அவரை தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில் திராவிட ராஜதந்திரத்தை அறியாத அவர் சந்திக்க தலையசைத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக கவனமாக ஊடகங்களுக்கு தெரியாமல் கொல்லைப்புறமாக தலையில் முக்காடு போட்டு கொண்டு, பாட்டாளிகளின் சொந்த சமூகத்தை சேர்ந்த இருவரோடு திராவிட கட்சியின் அடுத்த தலைவர் அவரை சந்தித்துள்ளர்.
இதில் எங்கே ராஜதந்திரம் என்கிறீர்களா? பாட்டாளிகள் தங்கள் முடிவான திராவிட கட்சிகளை ஆதரிப்பதில்லை என்ற நிலைபாட்டை வந்தவர்களிடம் தெளிவாக எடுத்து கூறியும், நீங்கள் தற்போதைக்கு எதையும் வெளியே கூறவிடவேண்டாம் என்றும், உங்கள் செயற்குழுவில் முடிவு செய்வதாக வெளியே கூறுங்கள் என்று கேட்டுகொண்டது. தனக்கே உரிய ராஜதந்திரத்தை பயன்படுத்தி வெளியே வந்து தனது ஊடக அடிமைகளிடம், பாட்டாளிகள் ஆதரவு தங்களுக்கே என்று எழுதச்சொல்லி மார்தட்டிக் கொண்டது.
பாட்டாளிகள் மீது சேறு பூச காத்து கொண்டிருந்த ஊடகங்கள் இச்சம்பவத்தை பயன்படுத்தி "திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை" என்ற கொள்கையில் நிலைப்பாடு இல்லாத கட்சி என்று முத்திரை குத்தி பாட்டாளிகள் மீது மீண்டும் ஒருமுறை அவதூறை பரப்பியது.
ஆட்சி, அதிகாரம், பதவி என வரும் போது, எப்போதும் போல், திராவிட கட்சியின் உயிர்மூச்சு கொள்கையான சாதி ஒழிப்பை குப்பையில் தூக்கி எரிந்துவிட்டு, எப்படிபட்டவர்களின் ஆதரவுக்கும் கையேந்துவார்கள் இவர்கள். இதுதான் தந்தை பெரியார் அவர்கள் இவர்களுக்கு கற்றுகொடுத்த கொள்கை பிடித்தம்.
ஏன் அவர் பாட்டாளிகளின் சமூகத்தை சேர்ந்தவர்களோடு வர வேண்டும்? ஏன் மற்ற சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்த கட்சியில் இல்லவே இல்லையா? மற்ற கட்சிகளிடம் தூது சென்ற போது இந்த இருவர் தான் கூட சென்றார்களா? அப்படி வந்தாவது அரியணை ஏறி பதவி சுகம் அனுபவிக்கலாம் என்ற ஆசை தானே! இதுதான் திராவிட கட்சிகளின் உயிர்மூச்சு கொள்கையான சாதி ஒழிப்பா?
சரி....பாட்டாளிகள் விஷயத்தில் தான் இப்படி என்றால் தேய்ந்து கொண்டிருக்கும் மற்றொரு நடிகரின் கட்சியிடம் ஆதரவு கேட்க யாரை அனுப்பியிருந்தார்கள் தெரியுமா?அங்கே நாயுடு சமுதாயத்தை சேர்ந்த எ.வ. வேலு தூது அனுப்பபட்டிருக்கிறார். சரி.. அதையும் விடுங்கள்., மனித நேயத்தை பெயராக கொண்ட இஸ்லாம் கட்சியிடம் ஆதரவு கேட்கும் போது, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த மைதீன்கான் சென்றிருக்கிறார். இந்த செயல்பாடுகள் எல்லாம் திராவிட கட்சியின் எந்த சாதி ஒழிப்பு கொள்கையின் கீழ் வருகிறது?
சாதி ஒழிப்பு, சாதி அழிப்பு, சாதி எதிர்ப்பு, சாதி வெறி, சாதி சாதி என தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் பொதுமக்களை சிந்திக்க விடாமல், திராவிட அரசியல்வாதிகளின் கைகூலிகள் மக்களை மூளைச்சலவை செய்து திசை திருப்பி சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே.. மேலும், இதற்கு துணை போகும் ஊடகங்களே, பத்திரிக்கையாளர்களே, சமூக ஆர்வலர்களே, எழுத்தாளர்களே, கவிஞர்களே, முற்போக்குவாதிகளே, இப்போது என்ன சொல்ல போகிறீர்கள்?
1. இரண்டு வாரங்களுக்கு முன் "எந்த திராவிட கட்சி இவர்களிடம் கூட்டணிக்கு போனார்கள்" என்று கர்ஜித்த ஒருவர், இன்று எதற்காக வெளியே தெரியாமல் கூட கொல்லைப்புறம் வழியாக சென்று அவர்களை சந்திக்கவேண்டும்? இதுதான் திராவிட கட்சிகளின் சுயமரியாதை கொள்கையா?
2. தங்களுக்கு ஆதரவு இல்லை என்று உறுதியாக கூறிய பின்னரும், ஊடகத்திற்கு அவர்கள் ஆதரவு கொடுத்து விட்டார்கள் என்று ஏன் பொய்யை கசிய விடவேண்டும்? இதுதான் திராவிட கட்சிகளின் முற்ப்போக்கு கொள்கையா?
3. ஆதரவு கேட்க ஏன் இரண்டு பாட்டாளிகளின் சொந்த சமூகத்தை சேர்ந்த இருவரை உடன் அனுப்பி வைக்க வேண்டும்? வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அந்த திராவிட கட்சியில் இல்லையா ? இதுதான் திராவிட கட்சியின் சாதி ஒழிப்பு கொள்கையா ?
4. மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு யாருக்கு கேட்கிறீர்கள் ? இவர்தான் கடந்த ஆறாண்டு காலங்கள் மக்கள் நலனுக்காக தன்நலன் கருதாமல் போராடிய அப்பழுக்கற்ற போராளியா?
5.ஊழலுக்காக உலக அளவில் புகழ் பெற்ற ஒரு சாதனை தலைவி, அதாவது, கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் அடுத்த ஆறு ஆண்டுகள் தொடர வேண்டுமா?
போதும்! ஐம்பது ஆண்டு காலம் திராவிட மாயைக்குள் சிக்கி, நம்மை மறந்து, அடிப்படை உரிமைகளை இழந்து, மது போதையால் சிதைந்து, சினிமாவால் நம் கலாச்சாரத்தை தொலைத்து, மலிவுக்காகவும் இலவசங்களுக்காகவும் பிச்சையேந்த வைத்தது போதும்.
மக்களே! இவை அனைத்தையும் மாற்ற உங்களால் மட்டுமே முடியும்.. அதற்கு ஒரு சொட்டு மை போதுமே! உங்கள் விரலில் வைக்கப்படும் அந்த ஒரு சொட்டு மை ஒரு புதிய சகாப்தத்தை படைக்கட்டுமே! மக்களே விழித்து கொள்ளுங்கள்!
# முக்கனல் தமிழன்
Tuesday, June 25, 2013
Thursday, June 20, 2013
காண்டாமிருகமா? காட்டெருமையா? தமிழ்நாட்டின் முக்கியமான தேவையை நிறைவேற்றி தமிழக முதல்வர் சாதனை
காண்டாமிருகமா? காட்டெருமையா? தமிழ்நாட்டின் முக்கியமான தேவையை நிறைவேற்றி தமிழக முதல்வர் சாதனை ...
செய்தி: ஒரு ஜோடி காண்டாமிருகம் வழங்குமாறு அசாம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா, அதற்கு பதிலாக ஒரு ஜோடி இந்திய காட்டெருமைகளை வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
# Karthikeyan Appasamy : எந்த கேரளா ஜோசியக்காரன் சொன்னானோ...இந்த யாகத்துக்கு பேரு என்னவோ..தெரியல?!!!! நம்பூதிரி பணிக்கருக்குத்தான் வெளிச்சம்! காட்டெருமைமை வேணா தமிழ்நாட்டு காட்டிலே கம்மியா இருக்கலாம்..ஆனா செக்கு மாடுகளுக்கு பஞ்சமே இல்லை..பேசாம உங்க மந்திரி சபையிலே இருந்து ரெண்டை பிடிச்சு போடுங்க.....அதுகளும் வேலையில்லாமத்தான் இருக்குது!
## தமிழ்நாட்டுக்கு இப்ப மிக முக்கியமான மிக அத்தியவிசயமான ஒன்றை நம் தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார் .. இதுதா திராவிட அரசியலின் "சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு" .. வாழ்க தமிழகம்! வளர்க திராவிட அடிமைகள்!

Wednesday, June 19, 2013
எங்கே செல்லும் இந்த பாதை.. இதுதான் தமிழகத்தின் கல்வி கொள்(ல்)கை.. திராவிட அரசியலின் சாதனை
எங்கே செல்லும் இந்த பாதை.. இதுதான் தமிழகத்தின் கல்வி கொள்(ல்)கை.. திராவிட அரசியலின் "சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு"..
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வீட்டில் ரெய்டு நடந்த காலமெல்லாம் மலையேறி, இப்போது கல்வி நிறுவனங்களில் ரெய்டு நடக்கும் சீஸன்!
கடந்த வாரத்தில், நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டியில் உள்ள கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல், என்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் ஆகிய பள்ளிகளில் நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள், பள்ளிகளில் இருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
பள்ளிகளில் ரெய்டு நடக்க முக்கியக் காரணமாக இருந்தவர் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மதியழகன். அவரிடம் பேசினோம். ''நாமக்கல் பள்ளிகள் என்றாலே கொத்தடிமைகளின் கூடாரம் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். இங்கே படிக்கும் மாணவர்கள் எந்திரங்களாகத்தான் இருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு ரிசல்ட் வருவதற்கு முன்பிருந்தே, தமிழ்நாடு முழுக்க இருந்து பெற்றோர்கள் அட்மிஷனுக்காகக் குவிய ஆரம்பித்துவிட்டனர். பத்தாம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே, இந்தப் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு வருடத்துக்கு 1.93 லட்சம் கட்டணம் வாங்கினர். அட்மிஷன் அன்று மைக்கில், 'தயவுசெய்து 100 ரூபாய் நோட்டுக்கட்டுகளாகக் கொண்டுவராதீர்கள். எண்ணுவதற்குத் தாமதமாகிறது. 1000, 500 ரூபாய் கட்டுகள் மட்டும் கொண்டுவாருங்கள்’ என்று அறிவித்தனர். 480 மதிப்பெண்களுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கு 2.50 லட்சம் நன்கொடை வசூலிக்கப்பட்டது. இங்கே செலுத்தும் எந்தப் பணத்துக்கும் ரசீது கிடையாது.
இதையெல்லாம் நான் நேரில் பார்த்த பிறகுதான் வருமான வரித் துறைக்குப் புகார் செய்தேன். உடனே அதிகாரிகள் வந்தனர். அங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், என் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நான் கேட்ட பிறகே இப்போது ரெய்டு நடந்துள்ளது. நாமக்கல் பள்ளிகள் பெரும்பாலும் அரசாங்கத்தையும் மக்களையும் ஏமாற்றுகிறது. நேர்மையான அதிகாரிகளைக்கொண்டு, விசாரணை நடத்தவேண்டும் என்பதுதான் என் கோரிக்கை'' என்றார் வேதனையுடன்.
ரெய்டு நடந்த பள்ளிகளில் ஒன்றான கிரீன் பார்க் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர் சரவணனிடம் பேசினோம். ''வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்வது வழக்கமாக நடப்பதுதான். ஒவ்வொரு வருடமும் இப்படி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். காய்த்த மரம்தானே கல்லடி படும். எங்கள் பள்ளியும் அப்படி பிரபலமான பள்ளியாக இருப்பதால்தான் இந்த சிக்கல் வருகிறது. எங்களிடம் படித்த எவ்வளவோ பேர் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் ரிசல்ட் வந்ததும் எங்கள் பள்ளிகளில் கூட்டம் குவிகிறது. நாங்கள் யாரையும் கையைப் பிடித்து இழுத்துவருவது இல்லை. எங்கள் பள்ளியில் இதுவரை ப்ளஸ் ஒன் அட்மிஷன் தொடங்கவில்லை. விண்ணப்பம் மட்டும் கொடுத்திருக்கிறோம். பிளஸ் ஒன் படிக்க, ஹாஸ்டலுக்கும் சேர்த்து 1.40 லட்சம் வாங்குகிறோம். இதில் நன்கொடை எதுவும் இல்லை'' என்று சொன்னார்.
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமாரிடம் பேசியபோது, ''அந்தப் பள்ளிகளின் சொத்து தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அதில் நாங்கள் தலையிட முடியாது. கல்விக் கட்டணம் அதிகமாக வாங்குவது பற்றி எழுத்துப்பூர்வமாக எங்களுக்குப் புகார் வந்தால், நாங்கள் ஆய்வுசெய்வோம்'' என்றார்.
# பத்திரிக்கைச் செய்தி

Tuesday, June 18, 2013
சீர்திருத்தம் பகுதி 2: செவ்விந்தியர்களின் கற்றல், கற்பித்தல் முறை - இங்கே அரசியல் கற்பிற்கும் முறை எப்படி உள்ளது?
சீர்திருத்தம் பகுதி 2: செவ்விந்தியர்களின் கற்றல், கற்பித்தல் முறை - இங்கே அரசியல் கற்பிற்கும் முறை எப்படி உள்ளது?
சீர்திருத்தம் பகுதி 1 - இங்கே காண்க
இப்போதைய வல்லரசான அமெரிக்காவின் பூர்வக்குடிகள் செவ்விந்தியர்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவினர் அமெரிக்காவின் பெரும்பாண்மையான செவ்விந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.அப்போது செவ்விந்தியர்கள் கல்வி கற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது.அவர்கள் படிக்க எழுதுவது கூட அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு எதாவது ஒரு செய்தி தெரியும்னா அது அங்கிருந்த முதலாளிகளோ , ஐரோப்பவினர்களோ சொன்னால்தான் உண்டு .... அதாவது ஆடு மாடுகளை போல அவர்களை கட்டுபடுத்தி அடிமை படுத்தி வைத்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் அந்த செவ்விந்தியர்களுக்குள் ஒரு டீலிங் .. அந்த டீலிங் என்னன்னா , நம்மில் யாருக்காவது கற்கும் வாய்ப்பு இருந்து கற்றிருந்தால் அவர் கல்லாத ஒருவருக்கு அந்த கல்வியை கற்பிக்க வேண்டும். அவர்கள் அதை ஒரு பிரச்சாரமாக செய்திருக்கிறார்கள். அந்த வரலாறு புகழ்மிக்க பிரசாரத்தின் பெயர் " Each One ,Teach One ". அதாவது படிக்க வாய்ப்புகிடைத்த ஒவ்வொரு செவ்விந்திய அடிமையும், வேறு ஒரு படிக்காத அடிமைக்கு கண்டிப்பாக அந்த கல்வியறிவை சொல்லிதர வேண்டும் .. அவர் மற்றோருவருக்கென்று பட்டியல் நீளவேண்டும் ... சூப்பர் இல்ல ?
// பல நூற்றாண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த இந்த காட்சிகள் , இருபத்தியோராம் நூற்றாண்டில் அப்படியே இங்க தமிழ்நாட்டுல நடக்கிறது.
அங்கே அமெரிக்காவில் ஐரோப்பவினர்தான் முதலாளி.. இங்கே திராவிட அரசியல்வாதிகள் தான் முதலாளி
அங்கே செவ்விந்தியர்கள் அடிமைகள்.. இங்கே மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள் அடிமைகள்
அங்கே அந்த ஐரோப்பா முதலாளிகள் சொன்னதுதான் சட்டமும், செய்தியும் .. இங்கே திராவிட அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இருக்கும் ஊடகங்கள் சொன்னதுதான் சட்டமும், செய்தியும்..
அங்கே செவ்விந்தியர்களுக்கு சாப்பிடுவதற்கு கண்டிப்பாக ஏதாவது புல்லுக்கட்டு கொடுத்து இருப்பார்கள்.. இங்கே தமிழர்களுக்கு மலிவு விலை உணவகம், டாஸ்மாக் ......
ஆனால்....
அங்கே செவ்விந்தியர்கள் கற்றுக்கொள்ள " Each One ,Teach One " பிரச்சாரம். இங்கே தமிழர்கள் நல்ல அரசியலை கற்க எந்த முறை ? ...
அதை விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம் ..
#Samathuvam India
Each One, Teach One -WIKI:
http://en.wikipedia.org/wiki/
Monday, June 17, 2013
சீர்திருத்தம் பகுதி 1: நம் நாட்டில் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலில் முதலிடம் இருப்பது எது தெரியுமா?
சீர்திருத்தம் பகுதி 1: நம் நாட்டில் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலில் முதலிடம் இருப்பது எது தெரியுமா?
நம் நாடு சுதந்திரம் அடைந்து 66 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் நாம் முன்னேற வேண்டிய துறைகள் மற்றும் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலோ மிக நீளம். நம் நாட்டில் சீர்திருத்த வேண்டிய விடயங்களின் பட்டியலில் முதலிடம் இருப்பது எது தெரியுமா ? ....
கல்வியா ? ... இல்லை ,
மருத்துவமா ? .....இல்லை ,
விவசாயமா? ..இல்லை ,
வேலைவாய்ப்புகளா ? ..இல்லை ,
தொழில்நுட்பத்திலா ? ...இல்லை ....வேறென்னவென்று கேட்கறீங்கள ?.
மேற்கூறிய அனைத்தையும் சீர்திருத்தகூடிய மகா தத்துவமான அரசியல்தான் நம் நாட்டில் சீர்திருத்தபட வேண்டிய முதல் விடயம். அரசியல் சீர்திருத்தங்களால் மட்டுமே ஒரு நாடு வளமான, பலமான முன்னேறிய நாடக இருக்க முடியும் ..
சரி, ஊழல்கரை படிந்த, அராஜகம் நிரம்பிய, ஒழுக்கம் இல்லாத நம் நாட்டு அரசியலில் எப்படி மாற்றங்கள் கொண்டு வரலாம் ?
அதற்கு மக்களாட்சி முறையில் மிக எளிதான பதில், "மக்களுக்கு அரசியல் பற்றிய நல்லறிவும், அரசியலில் உள்ள கோட்பாடுகள் குறித்து ஒரு தெளிவும் ஏற்படுத்த வேண்டும்" .. பின்பு மக்களே முடிவு செய்து கொள்வார்கள் அவர்களது தலைவர்களை .....
தமிழகத்தில் அரசியல் எப்படி கற்றுக் கொடுக்கப்படுகிறது ?
இப்பொழுது, நம் நாட்டு மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டுவது எந்த முறைகளில் தெரியுமா ?
அதை எப்படி செய்கிறார்கள் தெரியுமா ? அவைகள் யாவும் மலிவான வியாபார யுக்திகள்.
- "சன் செய்திகள் ", "ஜெயா செய்திகள் “, கலைஞர் செய்திகள், "புதியதலைமுறை செய்திகள் " மற்றும் பல நடுநிலையற்ற செய்திகள்.
இப்போ புரிகிறதா டிவியை ஏன் இலவசமா கொடுத்தாங்கன்னு?.
இது மட்டுமா ?
-"தினமலர்", "தினகரன்”,"முரசொலி ", "விகடன் “ போன்ற
காசு கொடுத்தால் சங்கு ஊதும் ஊடக தீவிரவாதிகளின் கூட்டணி ….
பிறகு விட்டாங்களா ?
- பிரியாணிக்கும், குவாட்டருக்கும் கூடிய கூட்டத்தில் , "என் உடன்பிறப்பே,என் உடலின் ஒரு உறுப்பே" என்று அடுக்குமொழி வசனம் தொண்டை கிழிய பேசி அரசியல் அறிவு ஊட்டுவது...
- காசுக்கொடுத்தால் குத்தாட்டம் ஆடும் திரை கூத்தாடிகளை முன்னிலை படுத்தி அரசியல் பேசுவது ...
இதுதான் "திராவிட அரசியலறிவு" ஊட்டும் முறை..
அதாவது ‘ஆக்டோபஸ்’ மாதிரி நம் மக்களை தன் திராவிட மாயைக்குள் பிடித்து வைத்துள்ளார்கள்.
இலவச போதையில் உள்ள நம் மக்களுக்கு, 'மந்தை ஆட்டு' கணக்கில் இப்படி அரசியல் சொல்லித்தந்தால், அவர்கள் நேர்மையான, உண்மையான தலைவர்களை எப்படி தேர்தெடுக்க முடியும் ?
அதற்கு என்னதான் மாற்று ?
நண்பர்களே, அதை அடுத்த பகுதியில் பார்ப்போம் !!
சீர்திருத்தம் பகுதி 2 - இங்கே காண்க

திண்ணை அரசியல் பரப்புரை மூலம் நாம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
திண்ணை அரசியல் பரப்புரை மூலம் நாம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
தமிழ் மக்களுக்காக உண்மையுடன் உழைக்க கூடிய "தமிழர் ஆட்சி" மலர வேண்டியும், மது போதை, இலவச, திரைப்பட கவர்ச்சியில் மூழ்கியுள்ள மக்களை தட்டி எழுப்பி புதிய அரசியல் எழுச்சியை உருவாக்குவதே இளைஞர்களாகிய நம் கடமை - இதுவே திண்ணை அரசியல் பரப்புரை இயக்கத்தின் நோக்கம்.
படித்த கட்சி சாராத இளைஞர்களை ஒன்றிணைத்து, தன் உற்றார், உறவினர்களை சந்தித்து அவர்களின் வாழ்க்கை சிக்கல்களை அறிந்து, நாட்டு நடப்புகளை விளக்கி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயற்சியை செய்ய வேண்டும். பா.ம.க வின் தொலை நோக்கு திட்டங்கள் எப்படி அவர்களுக்கு உதவும் என்பதை புரிய வைப்பதே நம் இயக்கத்தின் நோக்கம்.
இந்த சமூதாய பணியில் விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.
முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை!!

ஒ.. இதுதா மம்மீ அரசியின் "சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு"... டா ?
இன்றைய நிலையில் (June 2013) விலைவாசி விவரம் பின்வருமாறு:-
அரிசி கிலோ ஒன்றுக்கு 42 ரூபாய்
இஞ்சி கிலோ ஒன்றுக்கு 240 ரூபாய்
வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய்
அவரைக்காய் கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்
முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்
பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்
தக்காளி கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்
கடலை எண்ணெடீநு கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்
நல்லெண்ணெய் கிலோ ஒன்றுக்கு 240 ரூபாய்
புளி கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்
மிளகாய் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்
:பத்திரிக்கைச் செய்தி
ஒ.. இதுதா மம்மீ அரசியின் "சாதனை புரிந்த ஈராண்டு; சரித்திரம் பேசும் பல்லாண்டு"... டா ?
Saturday, June 15, 2013
தமிழக அரசு புதிய மலிவு விலை திட்டங்களை அறிவித்தால் எப்படி இருக்கும் ? வாழ்க தமிழகம்! வளர்க யாசகம்!!
டாஸ்மாக் மூலம் தமிழ்நாட்டுக்கு 22 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம். இந்த மகத்தான செய்தியை தொடர்ந்து அரசு பல புதிய திட்டங்களை அறிவித்தால் எப்படி இருக்கும் ?
திராவிட அரசின் மலிவு விலை சாராயக்கடையை தொடர்ந்து இலவச மிக்சி, கிரைண்டர் , டீவி , இலவச ஆடு மாடுகள், மலிவு விலை உணவகம்.... அப்புறம் ??
ஆடு மாட்டுக்கு கொடுக்கிற மலிவு விலை "புல்லுககட்டு", மலிவு விலை "புண்ணாக்கு" .
சாரயத்துக்கு சைடிஷ் மலிவு விலை "உறுகா பொட்டலம் ".
கடையில குடிக்கரவங்களுக்கு பேச்சுதுணைகொடுக்க மலிவுவிலை "அழகிகள் "
குடிச்சிட்டு சண்டைபோட மலிவு விலை "ஆயுதம் " ( அதாங்க...கட்டை, வீச்சரிவாள் ,சைக்கிள் செயின் ).
சண்டையில கிழிஞ்ச சட்டையை மாற்றிக்கொள்ள மலிவுவிலை "லுங்கி மற்றும் சட்டை" கடை.
குடிச்சவங்கள கைத்தாங்கலா வீட்டுக்கு கொண்டுபோய் சேர்க்க மலிவு விலை "பணிப்பெண்".........
அதுமட்டுமில்லாமல் வாரம்தோறும் தமிழ்நாட்டின் சோம்பேறி நம்பர் 1, மற்றும் குடிகாரார் நம்பர் 1 என்கிற பொட்டியில் வெல்பவருக்கு முதல்வருடன் தேநீர் விருந்து ....
அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு ... இதுவே வரப்பிரசதம்..
வாழ்க தமிழகம்! வளர்க யாசகம்!!

Subscribe to:
Comments (Atom)